×

துளித்துளியாய்

* வங்கதேசத்தில் நடைபெற்ற தேசிய கிரிக்கெட் லீக் போட்டியின்போது சக வீரர் அராபத் சன்னி ஜூனியரை தாக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஷஹாதத் உசேனுக்கு (33 வயது) அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டு தடை விதித்துள்ளது.
* சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் சுற்று நாளை தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி பலம் வாய்ந்த கர்நாடாகாவை சந்திக்கிறது. சூரத்தில் நடக்கும் இப்போட்டி மாலை 6.30க்கு தொடங்குகிறது.
* ஆஸ்திரேலிய அணியுடன் பிரிஸ்பேனில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயின் மறைவு செய்தியால் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், ஆஸி. அணிக்கு எதிராக திறமையை நிரூபிக்கும் உறுதியுடன் அவர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
* நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30க்கு தொடங்குகிறது.
* வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியுடன் நடந்து வரும் டி20 தொடரில் இந்தியா 4-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
* இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி, கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெறும் (நவம்பர் 29-30) என சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags : Small news
× RELATED மாநகர செய்தி துளிகள்...