×

ஸ்கூலிம்பிக்ஸ் 2019 சென்னையில் சிறப்பு ஓட்டம்

ஸ்கூலிம்பிக்ஸ் 2019 சார்பில் சென்னையில் டிச.1ம் தேதி சிறப்பு தொடர் ஓட்டம் நடைபெற உள்ளது. இதில்  5கிமீ, 10கிமீ தொலைவுக்கு 2வகையான ஓட்டப் பந்தயங்கள் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் ₹800 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு  டி ஷர்ட்,  எலக்ட்ரானிக் டைமர், சிற்றுண்டி,  முழுமையான பந்தயத் தொலைவை கடப்பவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். சிறுவர்கள் 2கிமீ தொலைவு ஓட்டத்தில் பங்கேற்கலாம். அதற்கு கட்டணம் ஏதுமில்லை. மேலும் விவரங்கள் அறிய, கட்டணம் செலுத்த www.skoolympics.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஐஎஸ்எல் தொடர் சென்னை ஆட்டம் மாற்றம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எப்சி - சென்னையின் எப்சி அணிகள் மோதும் போட்டி டிச.6ம் தேதி ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ஜார்கண்டில் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் போட்டி நடைபெறும் தேதி மட்டும் மாற்றப்படுகிறது. அதன்படி டிச.6ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த போட்டி டிச.9ம் தேதி நடைபெறும் என்று ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாலிபால் லீக் பிப்ரவரியில் 2வது சீசன்

புரோ வாலிபால் லீக்  தொடரின் 2வது சீசன் 2020 பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு  இருந்தது. இந்நிலையில் 2வது சீசன்  இந்தியன் வாலிபால் லீக் அல்லது நேஷனல் வாலிபால் லீக் என்ற பெயரில் நடத்தப்பட உள்ளதாக இந்திய கைப்பந்து சங்கங்களின் கூட்டமைப்ப (விஎப்ஐ)  அறிவித்துள்ளது. ஜெய்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற  கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  2வது சீசன் பிப்.25ம் தேதி நடைபெறும் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புரோ வாலிபால்  தொடரை நடத்திய  பேஸ்லைன் வெஞ்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சுமுகமான முறையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,  இனி வாலிபால் லீக் போட்டிகளை  கூட்டமைப்பே நடத்தும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

Tags : Special Olympics ,Chennai Olympics ,Chennai , Schoolflix 2019 ,Special Flow in Chennai
× RELATED சென்னையில் போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி