எம்ஆர்எப் சேலஞ்ச் கார் பந்தயம் துபாயில் நாளை தொடக்கம்

‘எம்ஆர்எப் சேலஞ்ச்’ 8வது கார் பந்தயம் 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்று துபாயில் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து டிச.12 முதல் 14ம் தேதி வரை பஹ்ரைனில் 2வது சுற்று பந்தயம் நடக்கும். கடைசி மற்றும் 3வது சுற்று சென்னையில் வரும் பிப்.14 முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பந்தயத்தை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்துகிறது. இந்த பந்தயத்தில் பார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர் உள்ளிட்ட முன்னணி கார் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Tags : MRF Challenge Car Race ,Dubai , MRF Challenge Car Race, Dubai tomorrow
× RELATED துபாயில் பலத்த மழை காரணமாக விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி