×

ட்வீட் கார்னர்...

விளம்பர தூதராக ஹிங்கிஸ்!

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் (39 வயது), சுவிஸ் டென்னிஸ் அகடமியின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகடமியில் உள்ளூர் வீரர், வீராங்கனைகள் மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளருக்கான லைசென்ஸ் பெற்றுள்ள ஹிங்கிஸ், ஏற்கனவே பெடரேஷன் கோப்பைக்கான சுவிஸ் மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘இந்த புதிய பொறுப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சுவிஸ் டென்னிசுக்காக இன்னும் அதிகம் பங்களிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Tags : Corner , Tweet corner
× RELATED ட்வீட் கார்னர்...