×

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 3 மாநகராட்சி, 18 நகர பஞ்சாயத்து மற்றும் 28 நகராட்சிகளில் 2000-க்கும் அதிகமான வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பத்றகான உள்ளாட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மாலை வரையிலான நிலவரப்படி காங்கிரசின் 753 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  பாஜ 590 இடங்களிலும், பிஎஸ்பி 14 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 312 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.வாக்கு எண்ணும் பணிமுடிந்த நிலையில், 961 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 737 வார்டுகளில் பாஜ வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.Tags : Congress ,government ,polls ,Rajasthan ,Election , Rajasthan Local Government Election, Congress
× RELATED மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி...