இந்தியா-பாக். தபால் சேவை மீண்டும் ஆரம்பம்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா உடனான தபால் சேவையை பாகிஸ்தான் அரசு எவ்வித முன்னறிவிப்புமின்றி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நிறுத்தியது. மேலும் தூதரகம், வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட இந்தியா உடனான அனைத்து சேவைகளையும் பாகிஸ்தான் முடக்கியது. தற்போது 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்தியா உடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கி இருப்பதாகவும் பார்சல் சேவையில் பழைய நிலையே நீடிப்பதாகவும் இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அரசு தரப்பில் இருந்து இது மீண்டும் தொடங்கப்படுவதாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related Stories: