×

அகாலி தலைவர் கொடூரக் கொலை

படாலா: பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்த தல்பீர் சிங் தில்வான், பின்னர் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் குர்தாஸ்பூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தார். இவர் தனது கிராமத்தில் உள்ள தனது பக்கத்து வீட்டுக்காரருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் நேற்று ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பானது. இதில் தல்பீர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது கால்களும் வெட்டப்பட்டன. இதுபற்றி படாலா காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.Tags : murder ,Akali ,Akali Brutal , The leader of the Akali Brutal, murder
× RELATED ஊராட்சி தலைவர் மீது பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை கோரி மனு