×

102வது பிறந்த நாள் இந்திரா காந்திக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாளையொட்டி, தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரசின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்ற மறைந்த இந்திரா காந்திக்கு, அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துவோம். அவரது ஆற்றல் மற்றும் உறுதிபாடு நாட்டை முன்னேற்ற பாதைக்கு உயர்த்த வழி வகுத்தது.

தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், வெளிநாட்டு கொள்கைகளில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரத்தக்கது,’ என கூறப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்,’ என கூறியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவை வலுவான நாடாக நிறுவுவதில் இரும்பு பெண்மணியான முன்னாள் பிரதமரும், அன்புக்குரிய எனது பாட்டியுமான இந்திரா காந்தி முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்,’ என பதிவிட்டுள்ளார்.Tags : Indira Gandhi ,Leaders ,birthday ,Birthdays , 102nd Birthday, Indira Gandhi, Heads
× RELATED கடையம்,பொட்டல்புதூரில் இந்திரா காந்தி பிறந்த நாள்