×

சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள்: கரூர் மகளிர் விரைவு கோர்ட் அதிரடி தீர்ப்பு

கரூர்: சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருடன் சேர்ந்து சிலர், இதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை திருப்பூர் பகுதிக்கு கடத்திச் சென்று, மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், கடந்த 2017ல் கலைச்செல்வி, குமுதவள்ளி, கல்பனா, சந்தனமாரி, பிரதாப், சிவக்குமார், மணி ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சசிகலா வழக்கை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் சிறுமியை கடத்தி, சதித் திட்டம் தீட்டி, அடைத்து வைத்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதற்காக கலைச்செல்விக்கு ஆயுள்தண்டனையும், ₹1லட்சத்து 60 ஆயிரம் அபராதமும், குமுதவள்ளி, கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ₹ 1லட்சத்து 35ஆயிரம் அபராதமும், மணிக்கு ஆயுள் தண்டனையும் ₹ 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும், சிவக்குமாருக்கு (36) இரட்டை ஆயுள் தண்டனையும் ₹ 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தனமாரி மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். பாலியல் பலாத்கார வழக்கில் 3 பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்புடன் பேசப்பட்டது.



Tags : women , sexually ,abused , girl, Five women, including 3 women,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது