430 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு கொசுவலை கம்பெனி உரிமையாளருக்கு சம்மன்: திருச்சி ஐடி அலுவலகத்தில் நாளை ஆஜராக உத்தரவு

திருச்சி: கரூர் கொசுவலை கம்பெனியில் ₹430 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாளை (21ம் தேதி) திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு

உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியில் வெளிநாடுகளுக்கு கொசுவலை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. கரூர் வெண்ணைமலையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், நாவல்நகர் அருகே பேக்டரியும் இயங்கி வருகிறது. கொசுவலை கம்பெனி அதிபர் வீடு சின்னாண்டாங்கோயில் பகுதியிலும் உள்ளது.  இங்கு, திருச்சி, மதுரை, கோவை, கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 10 கிலோ தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ₹32கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதுடன், ₹430 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசாமியை நாளை(21ம் தேதி) திருச்சியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related Stories: