×

கருத்துகேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் 7 பேரின் கட்சி பதவி பறிப்பு: பாஜ தலைமை அதிரடி

சென்னை: பாஜவில் கட்சி விதிகளை மீறி நடந்து கொண்ட 7 ேபரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.பாஜ அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் வெளியிட்ட அறிவிப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நகர், கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு ஆகிய மண்டலங்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டும், கருத்து கேட்பு கூட்டம் நடைபெற விடாமல் தடுத்து கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததாலும், ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுக்கும் வரை மாவட்ட பொது செயலாளர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி நகர தலைவர் வேணு செல்வம், கிருஷ்ணகிரி நகர பொது செயலாளர் தமிழ்செல்வன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் கார்த்தி, கிருஷ்ணகிரி நகர துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : BJP ,party ,Opinion meeting ,Argument , Argument , Opinion, Meeting,deposed, BJP leadership
× RELATED வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை...