×

புதிய 5 மாவட்டங்களை முதல்வர் நேரில் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் என 5 புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மாவட்டங்களையும் வரும் 22ம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கிவைக்க உள்ளார். அதன்படி, 22ம் தேதி தென்காசி, 26ம் தேதி கள்ளக்குறிச்சி, 28ம் தேதி திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை, 29ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், இவ்விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி  நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.

Tags : Chief Minister ,districts ,CM , New 5 districts, CM , chatting,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...