உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: திமுக அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்பப் படிவத்தை மாவட்ட கழகத்திலிருந்து பெற்று, தாம் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய விவரங்களை அந்தப் படிவத்தில் குறிப்பிட்டு நவம்பர் 20ம் தேதி வரை மாவட்டக் கழக அலுவலகத்தில் அல்லது தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டுமென ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிலையில், பல்வேறு மாவட்ட கழகச் செயலாளர்கள் காலஅவகாசம் நீட்டித்திட வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில், வருகிற 27ம் ேததி புதன்கிழமை வரை, விருப்ப மனு தாக்கல் செய்திட அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: