நேபாள நாட்டில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

காத்மாண்டு: நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டது.

Advertising
Advertising

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் சுனாமி  எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தில் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் நேபாள அரசு பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளம் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியிருந்தது. காத்மாண்டுவில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள சிந்துபால்சவூக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாக கூறப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: