வைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரையில் வைைக கரையோர ஆக்கிரமிப்புகள் இன்று காலை அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகருக்குள் 11 கி.மீ. தூரத்திற்கு, வைகை ஆறு கடந்து செல்கிறது. பாதாள சாக்கடை வசதி செய்யாததால், ஆற்றுக்குள் மாநகராட்சியே கழிவுநீரை கலக்க செய்கிறது. மேலும், பொதுமக்கள் கட்டிட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை ஆற்றுக்குள் வீசி வருகின்றனர். இந்த நிலையில், ஆற்றின் இருபுற கரைகளிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கான்கிரீட் சுவர் கட்டும் பணியில் பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் தனித்தனியே செய்கின்றன.

இப்பணி முடிந்ததும், இருபக்கமும் பூங்கா, இருவழி சாலை ரோடு போடப்படும். ஆற்றுக்குள், குப்பை கழிவுகள் போடுவது முற்றிலும் தடுக்கப்படும். இந்த சுற்றுச்சுவருக்கு இடையூறாக ஆழ்வார்புரத்தில் இருந்து மதிச்சியம் வரை கரையோரத்தில் கட்டிட ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதனை அகற்றினால் தான், சுற்றுச்சுவர் முழுமையாக கட்ட முடியும். மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ‘தாங்களே அகற்றுங்கள்’ அப்படி நீங்கள் அகற்றாவிட்டால், மாநகராட்சியே அகற்றும்” என ஏற்கனவே கால அவகாசம் வழங்கி, நோட்டீஸ்  வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நோட்டீசை கண்டுகொள்ளவில்லை.

இதனால் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ேமற்பார்வையில் ஊழியர்கள், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் அதிகாரிகள், ஊழியர்களை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: