எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் புகுந்த   பாம்பை அவரது வீட்டு நாய் கடித்து குதறி கொன்றது. திருச்சி திருவெறும்பூர் அருகே சோழமாதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.  நேற்று மாலை சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பெருமாள் வீட்டிற்குள் புகுந்தது. அப்போது பெருமாளும் அவரது மனைவி, மகன் ஆகியோர் கொல்லைப்புறத்தில் இருந்தனர். மகள் மட்டுமே வீட்டிற்குள் இருந்துள்ளார். பாம்பைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு பெருமாளின் மகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது வீட்டிற்குள் பாம்பு நுழைந்திருப்பதை அறிந்த பெருமாளும்,

அவரது மகன் மற்றும் மனைவி வீட்டிற்குள் வந்து பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றபோது பெருமாளின் செல்ல பிராணியான முனி என்ற நாய் வீட்டிற்குள் ஓடி வந்து பாம்பை கடித்து கொன்றது. நன்றியுள்ள ஜீவன் நாய் என்பதை நிரூபிக்கும் வகையில் எஜமான் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை வளர்ப்பு நாய்  கடித்து கொன்றது, பாம்பின் தலைப்பகுதியில் கடித்ததால்அந்த பாம்பால் எதிர்த்து போராட முடியவில்லை. சிறிது நேரத்திலேயே அது செத்துபோனது.  அந்த பாம்பு சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு. எஜமான விசுவாசத்தில் பாம்பை கடித்து கொன்ற நாயை அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

Related Stories: