×

விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை கண்டுபிடித்தது நாசா

நாசா சமீபத்தில் வெளிப்புற விண்வெளியில் இருந்து ஒரு மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை (தெர்மோநியூக்ளியர் ) கண்டறிந்ததுள்ளது. இதற்கு காரணம் ஒரு தொலைதூர விண்வெளி நட்சத்திரம் என்று தெரிவித்துள்ள விண்வெளி நிறுவனத்தின் அறிக்கை, இது சூப்பர்நோவாவில் வெடித்த ஒரு நட்சத்திரத்தின் நட்சத்திர எச்சங்கள் எனவும், ஆனால் இது கருந்துளை உருவாவதற்கு தேவையானதை விட மிகவும் சிறியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. நாசா இந்த வெடிப்பைக் கண்டறிந்தது எப்படியெனில், அது அனுப்பிய சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்களை, இந்த ஏஜென்சியின் சுற்றுப்பாதை ஆய்வு விண்கலமான NICER கண்டறிந்தது.   

ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. விண்வெளி மிகவும் ஆபத்தான மற்றும் மிகவும் உலோக இடம் ஆகும்.  கடந்த ஆகஸ்ட் மாத வெடிப்பின் போது 20 வினாடிகளில் வெளியிடப்பட்ட அதே அளவுள்ள ஆற்றலை, நமது சூரியன் வெளியிட 10 நாட்கள் தேவைப்படும் என்று கடந்த மாதம் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் ஆய்வுக்கட்டுரையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு மிக பிரம்மாண்டமாதாக இருந்தது என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய நாசா வானியற்பியல் நிபுணர் பீட்டர் புல்ட் நாசாவின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒளி பிரகாசத்தில் இரண்டு-படி மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். இது நடசத்திர மேற்பரப்பில் இருந்து தனித்தனி அடுக்குகளை வெளியேற்றுவதால் நடைபெற்றது. இந்த சக்திவாய்ந்த நிகழ்வுகளின் இயற்பியலை புரிந்துகொள்ள அதன் பிற அம்சங்கள் உதவுகின்ற என்று நாங்கள் கருதுகிறோம். என்கிறார்.   நட்சத்திரத்தின் மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கி கார்பன் அணுக்களுடன் இணைந்த ஹீலியத்தால் தெர்மோனியூக்ளியர் வெடிப்பு ஏற்பட்டதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பின்னர் ஹீலியம் வெடிக்கும் விதமாக வெடித்து முழு நட்சத்திர மேற்பரப்பு முழுவதும் தெர்மோநியூக்ளியர் நெருப்புபந்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம் என்று NICER தலைவர் ஜாவன் அர்சோமனியன் விளக்கினார்.

Tags : explosion ,NASA ,space , Thermonuclear, NASA, space, thermonuclear
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது