சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து வெடிவிபத்து: 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்

பீஜிங்: சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலக்கரி சுரங்க வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது.. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறும்போது, சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தில் உள்ள எரிவாயு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சீனாவின் கிழக்குப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ரசாயனத் தாக்குதலில் 78 பேர் பலியாகினர். 600 பேர் வரை காயமடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர். 2016 ஆம் ஆண்டு சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர். சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் அங்கு விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

Related Stories:

>