×

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும்  பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகக்ககூடிய நிலையில் அவசர அமைச்சரவை கூட்டமானது தலைமை செயலகத்தில் நடைபெற்றுது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் உள்ளாட்சி பதவி இடங்களுக்கான தேர்தல் முறையை நேரடி தேர்தல் அல்லது முறைமுக தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் குறிப்பாக நேரடி தேர்தல் மட்டுமே நடைமுறையில்  இருக்கிறது. நேரடி தேர்தல் என்பதால் மக்களே மாநகராட்சிக்குரிய மேயர், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி பதவி இடங்களுக்கான தலைவர் வார்டு உறுப்பினர்கள் அமைப்புகள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் மாநகராட்சி மேயர், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி, கவுன்சிலர்கள் , பேரூராட்சித் தலைவர்கள் போன்றவற்றை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க முடியும்.

மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் மாநகராட்சிக்கான மேயரை  அதற்கான உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதற்கான விவகாரம் தொடர்பாகவே இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது இருக்க கூடிய நேரடி தேர்தல் முறையை மாற்றி மாநகராட்சி மேயரை மறைமுகமாக தேர்ந்தெடுப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும் அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர் அனுமதி வழங்கிய பிறகு தான் சட்டமாக்கப்படும். ஏனென்றால் இதுபோன்ற சட்ட திருத்தங்கள் செய்யப்படும் போது சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். தற்போது சட்டப்பேரவை கூட்டம் இல்லாத பட்சத்தில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அதை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படலாம். இந்த நிலையில் தான் இதுவரை நடைபெற்ற உள்ளாட்சித் அமைப்பு தேர்தல்களில் கடந்த 2006-ம் ஆண்டு மட்டுமே மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டுக்கான தேர்தலும் மறைமுக தேர்தல் என்று இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகக்ககூடிய நிலையில் பாஜக பல்வேறு இடங்களை கேட்டு வருவதால், குறிப்பாக 5 ஐந்து மாநகராட்சிக்கான மேயர் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பாஜக தரப்பில் அதிமுக-வுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரச்சனையை காரணமாக இந்த மேயர் தேர்தலை மறைமுக தேர்தலாக நடத்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.


Tags : Palanisamy ,meeting ,Cabinet ,elections ,Mayor ,Panchayat ,Municipal ,Election ,Cabinet Meeting ,Corporation Mayor , Corporation Mayor, Indirect Election, Chief Minister Palanisamy, Cabinet Meeting, Decision
× RELATED புரெவி புயல் முன்னெச்சரிக்கை...