×

பால்வெளி அண்டத்தில் இருந்து மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் அதிவேக நட்சத்திரம் கண்டுபிடிப்பு

விண்மீன் மண்டலத்தின் மற்ற பெரும்பாலான நட்சத்திரங்களை விட பத்து மடங்கு வேகமாக பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் இருந்து பயணிக்கும் ஒரு தப்பிக்கும் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. S5-HVS1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 29000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நிலையில், மணிக்கு சுமார் 3.7 மில்லியன் மைல்கள் வேகத்தில் பயணம் செய்கிறது. இது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மனித மூதாதையர்கள் இரண்டு அடி நடக்க கற்றுக் கொண்டிருந்த போது, விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட கருந்துளையில் இருந்து தப்பித்தது.   

கார்டேஜி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு நட்சத்திர ஸ்ட்ரீம் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் சர்வே-ஐச் சேர்ந்த செர்ஜி கோபோஸோ என்பவரால், க்ரூஸ் அல்லது க்ரேன் விண்மீண் கூட்டத்தில் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. கருந்துளைகள் மிகஅதிக திசைவேகமுள்ள நட்சத்திரங்களை வெளியேற்றும் என நீண்ட காலமாக சந்தேகிக்கித்த நிலையில் ,இது மிக ஆச்சர்யமளிக்கும் ஒன்று.எனினும் இதற்கு முன்பாக அண்டைவிடல் மையத்துடன் இத்தகைய வேகமான நட்சத்திரத்தின் தெளிவான பிணைப்பை எப்போதும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

 S5-HVS1 அதன் அதிக வேகத்தின் காரணமாக முன்னோடியில்லாததாக இருப்பதாகவும், பூமிக்கும் மிக நெருக்கமாக கடந்து செல்லலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   பூமியிலிருந்து அதன் தொலைவு மற்றும் அதன் வேகத்தை வைத்து கணக்கிடும்போது, சூரியனை விட நான்கு மில்லியனுக்கும் அதிகமான மடங்கு பெரிதாக இருக்கும் சகிடாரியஸ் ஏ என பெயரிடப்பட்டுள்ள பால்வெளி அண்டத்திலிருந்து வெளியேறியிருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.   இந்த நட்சத்திரம், கேலக்ஸிக் மையத்தில் உருவாகியிருப்பதால் இது பார்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் இது உள்ளூர் சூழலுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது ஒரு விசித்திரமான நிலத்திலிருந்து வந்த விருந்தாளி  என கார்னேஜி ஆய்வகத்தின் டிங் லி கூறுகிறார்.


Tags : star ,Milky Way , Constellation, Milky Way, Star, Discovery
× RELATED திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை...