×

கும்பகோணம் ரயில் நிலைய முகப்பு பெயர் பலகையில் எழுத்து காற்றில் பறந்த அவலம்

*பயணிகள் அச்சம்

கும்பகோணம் : கும்பகோணம் ரயில் நிலைய முகப்பில் உள்ள பெயர் பலகையில் எழுத்துக்கள் காற்றில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் புகழ் பெற்ற கோயில்கள், நவக்கிரஹ கோயில்கள், புராதன கோயில்கள் உள்ளது. மேலும் கும்பகோணம் பகுதி வர்த்தக கேந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு தினம்தோறும் காசி, வாரணாசி, பெங்களூரு, மைசூர், திருப்பதி உள்ளிட்ட வெளிமாநிலம் மற்றும் அனைத்து வெளிமாவட்டத்தில் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகங்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றால் கும்பகோணம் ரயில் நிலைய முகப்பு வளைவில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையம் என்ற எழுத்துகளில் ‘யி’ என்ற எழுத்து உடைந்து காணாமல் போய் விட்டது. இதேபோல் மற்ற எழுத்துகளும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதுகுறித்து ரயில் நிர்வாகத்திடம் புகாரளித்தால் இந்த பெயர் பலகையை தனியார் வைத்துள்ளனர்.

அதனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். தற்போது மழை காலம் துவங்கியதையடுத்து ஆபத்தான நிலையிலுள்ள பெயர் பலகையை சீரமைக்க வேண்டும். இல்லாவி்ட்டால் பயணிகளின் நிலை கேள்வி குறியாகும். எனவே கும்பகோணம் ரயில் நிலையத்தில் உடைந்துள்ள பெயர் பலகை எழுத்துகளை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : board ,Kumbakonam , kumbakonam ,heavy wind. temples city
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...