×

உலகின் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்தியா சாதனை

டெல்லி: உலகிலேயே முதல் முறையாக ஆண் கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது. இந்த கருத்தடை ஊசியானது எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி 13 ஆண்டுகள் பலன் தர வல்லது, அதன் பிறகு அது அதன் திறனை இழக்கிறது. இந்த அறுவை சிகிச்சையானது வாசக்டமி கருத்தடை முறைக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலகில் கிடைக்கும் ஒரே ஆண் கருத்தடை முறையாகும். இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 97.3 விழுக்காடு அளவிற்கு வெற்றிகரமான முடிவு கிடைத்துள்ளது.

தொடர்ந்து இந்த ஆண் கருத்தடை ஊசியால் எந்த  பக்கவிளைவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக இதனை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தயாரிப்பை உலகின் முதல் ஆண் கருத்தடை என்று பாதுகாப்பாக அழைக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்களுக்கான கருத்தடைவு ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும் அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இதேபோன்றதொரு ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கி சோதனை செய்த போது, மனநிலை மாற்றம், முகப்பரு ஆகிய கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை அந்நாடு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : India , World, First, Male, Contraception, India, Adventure
× RELATED நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே நீலகிரி...