
சென்னை: புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். புதியவை உள்பட 37 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்டு அரசியல் கட்சிகளின் கருத்தும் கேட்கப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற வழிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்ற வலியுறுத்தி உள்ளோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.