ராணுவ பயன்பாட்டிற்காக வரும் 25ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 47: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: 509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்படும் கார்ட்டோசாட்- 3 செயற்கை கோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதிதுல்லியமாக படம் பிடிக்க கூடியதாகும். எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் ஜூம் செய்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. இது தவிர அமெரிக்காவின் 13 நானோ செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் வரும் 25ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகின்றன. இவை தொடர்ந்து, டிசம்பரில் Risat-2BR1 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் மூலமும், Risat-2BR2  செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலமும் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த இரு செயற்கை கோள்களும் ராணுவ கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். மேகமூட்டமாக இருந்தாலும், இரவு நேரங்களிலும் ஊடுருவி படம் படிக்கும் திறன் கொண்ட கருவிகள் இதில் இடம்பெறுகின்றன.

தொடர்ந்து, எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல், எல்லைக்கு அருகே தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றினை கண்காணிக்க இந்த இரு செயற்கை கோள்களும் உதவும். இதற்கு முன்னர் ஏவப்பட்ட ரிசாட் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலுக்கு உதவியுள்ளன. டிசம்பரில் செலுத்தப்படவுள்ள ரிசாட் வரிசை செயற்கை கோள்களுடன் ஜப்பான், லக்சம்பர்க், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களின் 10 மைக்ரோ, நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படவுள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ஆண்டில், ராணுவ பயன்பாட்டிற்கான 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: