உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.90.91 கோடி மதிப்பில் கட்டடங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் 90.91 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  உயர்க்கல்வித்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கோளரங்க கருவி மற்றும் கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்வில்  தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமை செயலாளர் சண்முகம், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறையில் பணியாற்றி பணி காலத்தில் இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் 41 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு நியமன  ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

Related Stories: