×

சென்னையில் திமுக உள்ளிட்ட மாணவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரிக்கை

சென்னை: கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரி சென்னையில், திமுக உள்ளிட்ட மாணவ அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள இன்றைய சூழ்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவின் தற்கொலை விவகாரமானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ அமைப்புகள், கையில் எடுத்து போராடி வரும் நிலையில் மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாணவரணி, முஸ்லீம் மாணவர் பேரவை, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்கோக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட 10 மாணவர்கள் அமைப்புகளின் சார்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. திமுக மாணவரணியின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் இந்த ஆர்ப்பாட்டத்தினை தலைமை தாங்கி வருகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 கலத்கொண்டுள்ளனர். அவர்கள், மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு காரணமான ஐஐடி பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.Tags : Student Organizations ,Chennai ,Request to Create Safe Environment in Educational Institutions Student Organizations ,DMK , Chennai, DMK, student organizations, demonstration, student Fatima
× RELATED சென்னையில் ஊரடங்கு காரணமாக மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது!!!