இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்த விழுப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பங்கேற்று உரையாற்றினார். அதில் இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது எனவும், குழந்தைகள்  பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையே காரணம் எனவும் குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளுக்கு பாதுக்கான சூழல் உருவாக்குவதற்கு அரசாங்கம் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக சிறப்பு பிரிவு ஒன்றினை ஏற்படுத்தி சென்னை பெருநகரத்தில் அவர்களுக்கு கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் கொண்டுவரப்பட்டு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஆணையர், சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தடுக்க முயற்சி எடுத்துள்ளோம். இதையடுத்து அம்மா பேட்ரோல் எனும் பிங்க் நிற ரோந்து வாகனத்தின் மூலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடம் ஆகியவற்றிற்கு சென்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதோடு மட்டுமின்றி பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன். சிறுவர் நல பிரிவு மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

Related Stories: