×

தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அமெரிக்காவிடம் சீனா தகவல்

பெய்ஜிங்: தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் சீனா கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு மிகமுக்கியமான கடல் வழியான தென் சீனக் கடலுக்கு, சீனா முழுஉரிமை கொண்டாடுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது தென்சீனக் கடல், ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.

தென்சீனக் கடலில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும், அந்த பகுதியில் தனது ராணுவ பலத்தை காட்டி பதற்றத்தை தூண்டும் வேண்டும் வேலையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க் எஸ்பரிடம் வெய் ஃபெங் கூறியதாக வூ கியான் கூறியுள்ளார்.
சீனாவின் விரைவான ராணுவ நவீனமயமாக்கல் மூலம் அந்நாடு புதியதொரு ஆதிக்க நிலையை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைவிட அமெரிக்க ராணுவம் இன்னமும் அணுசக்தி உள்ளிட்டவற்றுடன் பல மடங்கு பலமுடன் திகழ்ந்து வருவதாக பல்வேறு ஆய்வறிக்கைகளின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Tags : US ,China ,South China Sea , Cessation,military strength,South China Sea,China, US
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...