×

மரங்களில் செங்குத்தாக ஏறும் மரங்கொத்தி!

நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

மரங்கொத்தி பறவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப் பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவை. மரங்களில் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு. இந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், பசைத் தன்மை கொண்டிருப்பதாலும் தன் அலகு செல்ல முடியாத மரப்பொந்துகளில், தன் நாக்கை நீட்டி, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப் பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. இவற்றில் ஒரு வகைதான் பொன்முதுகு மரங்கொத்தி. பொன்முதுகு மரங்கொத்தி (Lesser golden-backed woodpecker) இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் பறவை. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒருசில மரங்கொத்திகளில் இது ஒன்று.

தனித்துவமான ஓசை எழுப்பும் இப்பறவை அசைந்து அசைந்து பறக்கும் தன்மையுடையது. 29 செ.மீ- பொன்நிறமான உடலைக் கொண்ட இதன் மார்பும் வயிறும் வெண்மையானது. கறுப்புக் கீற்றுகள் கொண்டது. நெற்றியும் தொண்டையும் குங்குமச் சிவப்பாக இருக்கும். மரங்களில் செங்குத்தாக ஏறும் தகவமைப்பைப் பெற்றுள்ள ஒரே பறவை இதுவாகும். தமிழகம் முழுவதும் வறள் காடுகள், இலையுதிர் காடுகள் மா, பலா போன்ற பழமரங்கள் நிறைந்த சிற்றூர் தோப்புகள் விளைநிலங்கள், சாலை ஓர மரங்கள், தென்னை, பனைமரங்கள் வளர்ந்துள்ள இடங்களிலும் பார்க்கமுடியும்.




Tags : treepecker , Woodpecker, bird, rhyme, black belt
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...