திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சணல் பைகளில் லட்டு கொடுக்க தேவஸ்தானம் முடிவு: பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

ஆந்திரா: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் சராசாரியாக ம் 3.5 லட்சம் முதல்  4 லட்சம் வரை லட்டுக்கள் விற்கப்படுகிறன, அந்த  லட்டு பிரசாதங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கொடுக்கிறார்கள், இதனால் தினமும் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் லட்டுக்கள் வினியோகப்படுகின்றன. மேலும், பேப்பர் பெட்டி, பேப்பர் பைகளிலும் லட்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் முலாம் பூசப்பட்ட சணல் பைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஏற்கனவே சணல் பைகள் திருப்பதி கோவிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய சணல் கழகம் திருப்பதி கோவிலில் சிறப்பு கவுண்டர் திறந்து சணல் பைகளை விற்று வருகிறது. இந்த பைகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கூறும்போது திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. லட்டுகள் பிரசாதம் வாங்க பிளாஸ்டிக் இல்லாத பைகளான சணல் பைகள், பேப்பர் பெட்டி, பேப்பர் பை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தபட்டு வருகிறது என தெரிவித்தார். இன்னும் சில மாதங்களில் லட்டு பிரசாதங்களை சணல் பைகளில் வைத்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related Stories: