அதிமுகவை அச்சுறுத்தினால் வேங்கை, வேட்டை நாய், புலிப்படை பாயும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிரட்டல்

விருதுநகர்: உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: விருதுநகர் எம்எல்ஏ தேர்தலில் ஏமாந்து விட்டோம். உள்ளாட்சி தேர்தலில் ஏமாறக்கூடாது. எரிவதை பிடுங்கினால், கொதிப்பது தானாக அமரும். அதிமுக தானாக ஜெயித்து விடும். உள்ளாட்சியில் ஜெயிப்பதற்கான சித்து விளையாட்டை சொல்லித் தருகிறேன். இளைஞர்களுக்கு உள்ளாட்சியில் வாய்ப்புக் கொடுங்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியும். எம்பி தேர்தலில் தோற்றுப்போனோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள், எம்பி தேர்தலில் தோற்றதும் திரும்ப வந்து விட்டனர். அவர்களுக்கும் மரியாதை, பொறுப்பு உண்டு.

எம்பி தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட 3 மடங்கு கூடுதலாக ஓட்டு வாங்க வேண்டும். அதிமுகவினரை யாரும் அச்சுறுத்த முடியாது. அதையும் மீறி அச்சுறுத்தினால், அவர்கள் ஊரில் நிம்மதியாக வாழ முடியாது. அதிமுகவில் சித்து விளையாட்டு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் அனைவரும் இளைஞர்கள். வேங்கை மாதிரி. வேட்டை நாய் மாதிரி, புலிப்படை மாதிரியான இளைஞர் படை பாய தயாராக இருக்கிறது. அதிமுகவை எதிர்த்து உறவினர்கள் நின்றாலும் தோற்கடிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>