தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள் திறப்பு: அறநிலையத்துறை கமிஷனர் தகவல்

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய இடங்களில் பயணத்தகவல் மற்றும் அசவுகரியங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தகவல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இத்தகவல் மையத்தை 16.11.2019 முதல் 31.1.2020 வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக  1800-425-1757 என்ற எண்ணில் அழைத்து பக்தர்கள் பயனுறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் அருகில்   தேனி-குமுளி சாலையிலும், குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சார்பில் பண்பொழி, திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக  புளியரையில் உள்ள நெற்களஞ்சியம் அருகிலும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: