உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 21ம் தேதி முதல் காங்கிரசார் விருப்ப மனுக்கள் பெறலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் மாநகராட்சி மேயர்- 10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் ₹3,000, நகராட்சித் தலைவர்- 5,000, நகராட்சி வார்டு உறுப்பினர் 2,000, பேரூராட்சித் தலைவர் 3,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் 1,000, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3,000, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 2,000 என நன்கொடைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் 50 சதவீத கட்டணம் செலுத்தினால் போதுமானது. தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிற விருப்ப மனுக்களை வரும் நவம்பர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நன்கொடைத் தொகையோடு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திரும்ப பெற வேண்டும்.

Related Stories:

>