அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து ஓபிஎஸ் சென்னை திரும்பினார்

சென்னை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 8ம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பினர், சிறு,  குறு, நடுத்தர தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.

Advertising
Advertising

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன், மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, பால் மனோஜ்பாண்டியன், வைகைசெல்வன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்  மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

Related Stories: