மோடி அரசின் பொருளாதார மந்தநிலை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அம்பலப்படுத்த வேண்டும் : ப.சிதம்பரம் கோரிக்கை

மோடி அரசு கடைபிடிக்கும் கொள்கையால், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசு கடந்த 16ம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் பங்கேற்க, சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. நாடாளுமன்றம் கூடும் நிலையில், இதை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதை அம்பலப்படுத்தவேண்டும். இது தொடர்பாக அரசுக்கு தரப்படும் அறிவுரை அல்லது விமர்சனத்தை அவர்கள் ஏற்பதில்லை. இந்த அரசின் பொருளாதாரத்தில் எந்த அம்சம் சிறப்பாக உள்ளது என பட்டியலிட்டால் ஒன்றை கூட குறிப்பிட முடியாது. இவ்வாறு டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: