×

போலீஸ் உடற்தகுதி தேர்வில் கயிறு ஏறும்போது தவறி விழுந்த வாலிபரின் கை முறிந்தது

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்களுக்கும், இதுதவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை நடத்தியது. தற்போது, தமிழகம் முழுவதும் 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ேநற்று கயிறு ஏறும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் தண்டையார் பேட்டை நேரு நகர் முதல் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (23), எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : police fitness test , boy's arm ,broken, climb the rope , police fitness test
× RELATED தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி