ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் பாதயாத்திரை செல்லும் நாய் : இதுவரை 480 கி.மீ. சென்றுள்ளது

திருமலை: திருப்பதியில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிந்த 13 ஐயப்ப பக்தர்கள் கடந்த 31ம் தேதி திருமலையில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். அந்த பக்தர்களுடன் திருப்பதியில் இருந்து ஒரு நாயும்  பின்தொடர்ந்து வருகிறது. தற்போது ஐயப்ப பக்தர்கள் கர்நாடகாவின் சிக்மகளூரில் பாத யாத்திரை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் 480 கி.மீ. அந்த நாயும் பாதையாத்திரை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து தங்களுடன் பாத யாத்திரையாக வரும் நாயை விரட்டி அடிக்க மனமின்றி பக்தர்கள் தங்களுக்காக தயாரிக்கும் உணவில் நாய்க்கும் ஒரு பங்கு வைத்து வரும் நிலையில் அவர்களுடனேயே நாயும் சென்று வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சபரிமலைக்கு நாங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில் எங்களை பின் தொடர்ந்து நாய் வருவதை முதலில் கவனிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து நாங்கள் செல்லும் பாதையில்  எங்களுடன் பின் தொடர்ந்து இந்த நாயும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாங்கள் எங்களுக்காக தயார் செய்யக்கூடிய உணவில் அதற்கும் ஒரு பங்கு வைத்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: