×

ரிசர்வ் வங்கி விதிகளை மீறிய தேர்தல் பத்திரங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுடெல்லி: மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியின் விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், `பாஜ. ஜானாவுக்கு கருப்பு பணம் வருவதை அனுமதிக்கவே, தேசிய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டது. இது நாட்டு மக்களை காட்டி கொடுப்பதற்கு ஒப்பாகும்’’ என கூறியுள்ளார்.காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் எம்பி.யுமான ராஜிவ் கவுடா கூறுகையில், ‘‘தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பு பெயரளவில் மட்டுமே  ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறப்பட்டது. இது தொடர்பான ரிசர்வ் வங்கி பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. கருப்பு பணத்தை பாஜ. கட்சிக்குள் கொண்டு வரவே தேர்தல் பத்திரங்களை பாஜ அரசு வெளியிட்டதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

Tags : cancellation ,RBI , violation , RBI rule, Emphasis ,cancellation
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு