×

இஎஸ்ஐ தென்மாநில விளையாட்டு புதுவையில் கோலாகல தொடக்கம்

புதுச்சேரி: புதுவையில் முதன்முதலாக நடைபெறும் இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையிலான  விளையாட்டு போட்டித் தொடரை டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா தொடங்கி வைத்தார்.தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் சார்பில் (இஎஸ்ஐ) 2 ஆண்டுக்கு ஒருமறை தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு 12வது தென்மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி புதுவையில் முதன்முதலாக நேற்று தொடங்கியது. டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா கொடியசைத்தும், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியும் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.முன்னதாக விளையாட்டில் பங்கேற்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, நாக்பூர் இஎஸ்ஐ நிறுவனங்களில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை டிஜிபி ஏற்றுக் கொண்டார்.

இஎஸ்ஐ தமிழக, புதுச்சேரி அலுவலக கூடுதல் ஆணையர் கிருஷ்ணகுமார், மண்டல துணை இயக்குனர் சுந்தர், புதுச்சேரி உதவி இயக்குனர் லிங்கேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் கேரம், செஸ், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. 550 ஆடவர், 281 மகளிர் உள்பட மொத்தம் 831 பேர் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர். வாலிபால், கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து உள்ளிட்டவை இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திலும், கிரிக்கெட் போட்டிகள் மொரட்டாண்டி பல்மைரா மைதானத்திலும், கேரம், செஸ் ஆகியவை முதலியார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மண்டல அலுவலகத்திலும் நடைபெறுகின்றன.

Tags : ESI South ,ESI South-Level Games , ESI, South-Level, Games
× RELATED பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட...