×

சில்லி பாயின்ட்...

* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. இந்த தொடரில் இருந்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் காயம் காரணமாக விலகி உள்ளார்.
* கொல்கத்தாவில் இந்தியா - வங்கதேசம்  அணிகள் மோதும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியையொட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராட்சத பிங்க் பலூன், ஹூக்ளி ஆற்றில் பிங்க் படகு என கொல்கத்தா நகரமே இளஞ்சிவப்பு நிறம் பூசி ஜொலிக்கிறது.
* துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன் 13 ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த இந்திய அணியினர், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
* டெல்லியில் நடக்கும் தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் டிரேப் பிரிவில் பீகார் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் 50ல் 42 இலக்குகளை சுட்டு வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
* இந்தியா - ஒமான் அணிகள் மோதும் பிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் மஸ்கட்டில் இன்று நடைபெறுகிறது. வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இன்றைய போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் சுபில் செட்ரி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

Tags : Chili ,Point ...
× RELATED சில்லி பாயின்ட்...