×

வெ.இண்டீசுக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அசத்தல்

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 29 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. ரகமதுல்லா குர்பாஸ் 79 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), அஸ்கர் ஆப்கன் 24, நஜிபுல்லா ஸத்ரன் 14, முகமது நபி 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் காட்ரெல், வில்லியம்ஸ், கீமோ பால் தலா 2, போலார்டு 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் மட்டுமே சேர்த்து 29 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷாய் ஹோப் அதிகபட்சமாக 52 ரன் (46 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), எவின் லூயிஸ் 24, ஹெட்மயர், கேப்டன் போலார்டு தலா 11 ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3, முஜீப் உர் ரகுமான், கரிம் ஜனத், குல்பாதின் நயிப், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரகமதுல்லா ஆட்ட நாயகன் விருதும், கரிம் ஜனத் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி லக்னோவில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக 4 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது (நவ. 20-23).Tags : Afghanistan ,India ,series , Afghanistan , T20 series, India
× RELATED ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் கார்...