×

நவம்பர் 22ம் தேதி விஜேந்தர்-அடாமு துபாயில் மோதல்

துபாய்: இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் விஜேந்தர் சிங்குடன் முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் சார்லஸ் அடாமு (கானா) மோதும் போட்டி, துபாயில் நவ. 22ம் தேதி நடைபெற உள்ளது.தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கி கலக்கி வரும் விஜேந்தர் சிங் (34 வயது) தொடர்ச்சியாக 11 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதுடன் ஆசிய பசிபிக் மற்றும் ஓரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனாகவும் சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக தனது 12வது போட்டியில் சார்லஸ் அடாமுவை (42 வயது) வரும் 22ம் தேதி சந்திக்கிறார்.இந்த போட்டி துபாய், புளூவாட்டர்ஸ் ‘சீசர்ஸ் பேலஸ்’ அரங்கில் நடைபெற உள்ளது. அடாமு இதுவரை 47 போட்டிகளில் களமிறங்கி 33 வெற்றி பெற்றுள்ளார். இதில் 26 முறை எதிர்த்து போட்டியிட்ட வீரரை நாக் அவுட் செய்துள்ளார். விஜேந்தர் 8 முறை நாக் அவுட் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Dubai ,Vijender-Adamu ,conflict , 22nd , November,Vijender-Adamu , Dubai
× RELATED துபாயில் இன்று 2வது லீக் ஆட்டம்: டெல்லி-பஞ்சாப் பலப்பரீட்சை