மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு விருது

சென்னை: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில் 12வது இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து என்ற தலைப்பினாலான கருத்தரங்கம் லக்னோவில் நடந்தது.இதில் சிறந்த நகர்ப்புற வெகுஜன போக்குவரத்து திட்ட பிரிவின் கீழ் ‘பாராட்டுத்தக்க முன்முயற்சி’ விருது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சாலிடம் விருதை வழங்கினார். பயணிகளுக்கான வாகன சேவை மற்றும் நகரத்தின் முக்கிய போக்குவரத்து  ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: