ஐசிஎப் தொழிற்சாலையில் அதிகாரி திடீர் தற்கொலை

* உயரதிகாரி டார்ச்சர் காரணமா?

* போலீசார் தீவிர விசாரணை

அண்ணாநகர்:  சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்ைன ஐசிஎப்பில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள், இந்திய ரயில்வே துறை மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி  செய்யப்படுகிறது.இங்கு, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜாமணி (54) என்பவர், அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில், விடுப்பு முடிந்து  நேற்று காலை வேலைக்கு வந்தார்.

வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட அவர், சிறிது நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், இதுபற்றி ஐசிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ராஜாமணி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உயர் அதிகாரிகள் டார்ச்சர்  காரணமாக ராஜாமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.ஐசிஎப் தொழிற்சாலையில் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: