தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து 5 மாவட்டங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டினால் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை என உத்தரவிட்டு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் தென்பெண்ணையின் கிளையான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையினால் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் நீர் பற்றாக்குறைவால் கடுமையாக பாதிப்படையும். இதை அறிந்திருந்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதிடாமல் வாய்ப்பினை கோட்டை விட்டதாக திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன குரலை எழுப்பின. இந்நிலையில் வரும் 21ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்துநிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வருகின்ற 21 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாதுக லந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: