×

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்

சென்னை: வருமான வரி ஏய்ப்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டுள்ளது. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானவேல் ராஜா மீது வரி ஏய்ப்பு வழக்கு

நடிகர் சூர்யா,கார்த்தி,விஜய் சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் ஞானவேல் ராஜா. சமீபத்தில் கமல் தன்னிடம் 10 கோடி கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பிடிவாரண்ட் பிறப்பிப்பு

இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக கேள்விகளை கேட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Gnanvelrajah, Income Tax Evasion, Pdivarand, Egmore Court
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...