×

அரிய பறவை

நன்றி குங்குமம் முத்தாரம்

முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.

ஆனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கும் ‘கேரியன் காகம்’ பச்சை, ஊதா கலந்த நிறங்களில் இருக்கும். அவற்றைப் பார்த்த வுடனே கிளி என்று நினைப்போம். தவிர,  நியூசிலாந்து, அயர் லாந்து. பிரிட்டனில் வாழும் ரூக் (Rook)  என்ற இன காக்கையும் ஊதா கலந்த நிறத்தில் இருக்கும். இப்படி காகத்தையும், அதன் இனவகைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே நேரத்தில் அழிந்து வரும் காகங்களும் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக ஹவாய் காடுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் 2002-இல் அழிந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பிறகு சில இடங்களில் அவை தென்பட்டன. தற் போதைய கணக்கெடுப் பின்படி 114 ஹவாயன் காகங்கள் எஞ்சியிருக்கின்றன. ஓர் அரிய பறவையாக மாறிவிட்டது ஹவாயன் காகம்.  இந்தக் காகத்தை ஹவாயில் வாழும் பழங்குடி மக்கள் தெய்வமாகக் கும்பிடுகின்றனர்.


Tags : Africa, Hawaii, Bird, Hawaiian Crow
× RELATED தெ. ஆப்ரிக்கா- இங்கி. மோதல்