பயிர் கழிவை எரிக்காத விவசாயிகளுக்கு 2,500 மாஜி முதல்வர் வலியுறுத்தல்

சண்டிகர்: அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது தான் டெல்லியில் காற்று மாசு பெருமளவில் உள்ளது.  இதைதடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்  ஹூடா நேற்று அளித்த பேட்டியில், பஞ்சாப் மாநில அரசு பயிர் கழிவுகளை எரிக்காமல் இருப்பதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2500  வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோன்று அரியானாவில் பயிர்கழிவுகளை எரிக்காத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1000 வழங்கப்படும் என அரசு  கூறுகிறது. 1000 விவசாயிகளுக்கு போதாது. 2500 தர வேண்டும்’’ என்றார்.

Related Stories: