×

சொல்லிட்டாங்க...

தற்கொலை தீர்வல்ல. சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சமாளிக்கும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
- தெலங்கானா கவர்னர் தமிழிசை

வறுமை, தட்பவெப்ப மாறுதல், தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதில் உலக நாடுகளிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழின எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில்  அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

அதிமுக அரசின் சட்ட அறிவுப் பற்றாக்குறையால் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் பணி மூப்புக் கொள்கையை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


Tags : Mindfulness, for the students, must
× RELATED கிணற்றில் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் பலி: ஒருவர் உயிர் தப்பினார்