×

மும்பை அணி அபார வெற்றி

மும்பை: சையது முஷ்டாக் அலி டிராபியில், அசாம் அணியுடனான டி பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி 83 ரன் வித்தியாசத்தில் அபாரமாக  வென்றது. மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அசாம் முதலில் பந்துவீசியது. மும்பை 20 ஓவரில் 5  விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 63 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஆதித்யா தாரே 82 ரன் (48 பந்து, 13 பவுண்டரி) விளாசினர். ஷ்ரேயாஸ்  அய்யர் 16, சித்தேஷ் 32*, நாயக் 10* ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய அசாம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து தோல்வியைத்  தழுவியது. மும்பை அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. டி பிரிவில் அந்த அணி 24 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Tags : umbai team , win , match
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள்...